திடீர் சம்பவம் செய்த ‘ஈரான்’!! அடுத்தடுத்து பாய்ந்த ‘ஏவுகணை’!! எதிர்பாராத அடி வாங்கிய ‘அமெரிக்கா’!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தற்காலிக அமைதி, தற்போது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதலால் சுக்குநூறாக உடைந்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான சென்ட்காம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர், அமெரிக்க நிலைகளை குறிவைத்து பல ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தை குறிவைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஏவிய இந்த ஏவுகணைகளை அமெரிக்காவின் அதிநவீன பேட்ரியாட் ஏவுகணை தற்காப்பு அமைப்புகள் வானிலேயே இடைமறித்து அழித்துள்ளன. இந்த தாக்குதலில் அமெரிக்க படைகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், அமெரிக்க ராணுவம் தற்போது உச்சகட்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே மறைமுகமாக நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ஈரானின் இந்த நடவடிக்கை முறியடித்துள்ளது. இந்த ஏவுகணை வீச்சு சம்பவமானது, உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் சூழல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கில் உடனடியாக எதிரொலித்துள்ளது. ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார் என ட்ரம்ப் ஒருபுறம் கூறினாலும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கடும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய பேச்சுவார்த்தையாளர் செய்யது முகமது மாரண்டி (Seyed Mohammad Marandi), தங்கள் நாடு எந்தவொரு முழு அளவிலான போருக்கும் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமைதியை நோக்கி நகர்வதாக கருதப்பட்ட இந்த விவகாரம், தற்போது மீண்டும் மோதல் போக்காக மாறியுள்ளதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா இதற்கு எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.

Related News

Latest News