இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை தாக்கிய ஈரான் : நெதன்யாகு என்ன ஆனார்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படைத் தளபதியின் இருப்பிடத்தை குறிவைத்து ‘கைபர் ஷெக்கான்’ (Kheybar Shekan) வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த “10-வது அலை” தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு தெரிவிக்கிறது.

தாக்குதல் நடந்த சமயத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்தோ, அவரது தற்போதைய நிலை குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Related News

Latest News