Tuesday, January 13, 2026

VRS கொடுக்கும் இறையன்பு IAS! அடுத்து கிடைக்கும் பெரிய பதவி? கோட்டையில் குஷி

3 முதுகலைபட்டங்கள், ஆங்கில இலக்கியம், உளவியல் மற்றும் நிர்வாகத்தில் 3 பிஎச்.டிபட்டங்களும் பெற்று பேச்சாளர், எழுத்தாளர், நிர்வாகப்பணி என பல பரிமாணங்களில் தடம் பதித்துள்ளவர் இறையன்பு IAS.

எதிர்க்கட்சிகளால் கூட விமர்சனம் வைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்படும் இறையன்புவிற்கு தலைமை செயலாளரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே வரும் 28ஆம் தேதி, அவர் விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்கே பிரபாகர் அல்லது முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் புதிய தலைமை செயலாளராக அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்டுகிறது.

இது ஒரு புறம் இருக்க, தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முடிவுக்கு திமுக கட்சி நிர்வாகிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News