இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி விகிதங்களில் மத்திய அரசு மாற்றங்கள் செய்துள்ளது.
இதில், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டியின் டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஐபிஎல் டிக்கெட் விலை மேலும் உயர இருக்கிறது.