கடந்த 9-ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் உலகெங்கிலும் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 தொடர் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் இன்று தொடங்கி உள்ளது. இந்த போன்களை டெல்லி மற்றும் மும்பையில் அமைந்திருக்கும் ஆப்பிள் நேரடி விற்பனை நிலையங்களில் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் ஏராளமான வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த புதிய மாடல்களை வாங்க குவிந்து சென்றனர். சிலர் வெளி மாநிலங்களிலிருந்து கூட வந்திருந்தனர். வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையே தள்ளிப்பிடித்து மோதியதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
