ரூ. 47,000 அதிரடி தள்ளுபடியில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் : எப்படி வாங்குவது?

ஆப்பிள் நிறுவனம் தனது 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், இந்த சலுகைகள் பயனர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

இந்த சலுகையை Imagine Store (Apple அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்) மூலம் பெற முடியும். இதில் அதிகபட்சமாக ரூ.47,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

256GB நினைவகத்துடன் வரும் iPhone 17 Pro Max-ன் அறிமுக விலை ரூ.1,49,900 ஆகும். இந்த சலுகையின் மூலம் அதன் விலை ரூ.47,000 குறைக்கப்பட்டு, ரூ.1,02,900 ஆக வழங்கப்படுகிறது.

  • குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 வரை கூடுதல் தள்ளுபடி அல்லது கேஷ்பேக்
  • பழைய ஸ்மார்ட்போனை மாற்றி (exchange) கொடுத்தால் ரூ.6,000 வரை கூடுதல் சலுகை
  • தகுதியான மாடல்களுக்கு ரூ.36,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பு

இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால், iPhone 17 Pro Max-ஐ சுமார் ரூ.89,900 வரை குறைந்த விலையில் வாங்க முடியும்.

அதேபோல், iPhone 17 மாடலின் ஆரம்ப விலை ரூ.82,900 ஆக இருந்த நிலையில், சலுகைகள் மூலம் அதை ரூ.37,900 வரை குறைந்த விலையில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள், புதிய ஐபோன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகின்றன.

Related News

Latest News