ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய iPhone 17 (256GB) மாடல், தற்போது Flipkart தளத்தில் விற்பனைக்கு அதிரடியான விலை குறைப்பில் வந்துள்ளது. ஆரம்ப அறிமுக விலை ரூ.82,900 இருந்தது, தற்போது நேரடி விலையில் ரூ.79,900-க்கு கிடைக்கிறது.
மேலும், வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை இணைத்தால் விலை இன்னும் குறைகிறது. குறிப்பாக, Flipkart Axis Bank கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் சுமார் ரூ.5,895 உடனடித் தள்ளுபடி பெறலாம். இதனால், பழைய போன் எக்ஸ்சேஞ்ச் செய்யாமலேயே iPhone 17-ஐ ரூ.74,005 விலையில் வாங்க முடியும், இது ஆரம்ப விலையைவிட கிட்டத்தட்ட ரூ.8,900 குறைவு ஆகும்.
பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் அதிகபட்சம் ரூ.31,300 வரை தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது. வங்கித் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை முழுமையாக பயன்படுத்தினால், பிரீமியம் ரக iPhone 17-ஐ வெறும் ரூ.44,270 என்ற மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். பழைய ஐபோன் மாடல்கள் அல்லது உயர்ரக ஆண்ட்ராய்டு போன்களை வைத்திருப்பவர்களுக்கு இது சிறந்த ஆஃபராகும்.
வரும் மார்ச் 4-ம் தேதி Apple Mega Event நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே இந்த அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
