Thursday, December 25, 2025

நம்பமுடியாத விலையில் ஐபோன் 16 பிளஸ்., மிஸ் பண்ணிடாதீங்க!

தீபாவளி பண்டிகை முடிந்ததும், ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஐபோன் 16 பிளஸ் மெகா டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 89,900 மதிப்புள்ள போன் தற்போது ரூ. 67,990க்கு கிடைக்கிறது. ஆக்சிஸ் வங்கி கார்டு மூலம் கூடுதல் ரூ. 4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போன்க்கான மதிப்பீட்டு அடிப்படையில் ரூ. 26,000 வரை தள்ளுபடி பெற வாய்ப்பு உள்ளது.

ஐபோன் 16 பிளஸ் அம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதில் புதிய A18 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் இன்டலிஜென்ஸ் அம்சங்களை ஆதரிக்கிறது. 48MP பிரதான கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பும், முன்பக்கத்தில் 12MP செல்‌பி கேமராவும் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

ஐபோன் 16 பிளஸ் 4674mAh பேட்டரியுடன் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது. IP68 மதிப்பீடு காரணமாக இது நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது 5 கலர்களில் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் டிஜிடல் வழங்கும் இந்த மெகா சலுகை, ஐபோன் வாங்கவோ அல்லது அப்டேட்டாக்கவோ விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு.

Related News

Latest News