கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்த 15க்கும் மேற்பட்ட தெருநாய்களை, குடியிருப்பு நல சங்கத்தினர் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம் சங்கத்தினருக்கு அப்பகுதியை சேர்ந்தவர் புகாரளித்தார்.
உடனடியாக அங்கு சென்ற விலங்கு நல வாரியத்தினர், இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்கு போராடிய நாய்களை மீட்டு அம்மாவட்ட அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல் கூராய்வு செய்ததில், நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.