டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். இதைதொடர்ந்து கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்ற அமித்ஷா, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதைதொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, டெல்லி கார் வெடிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் அனைத்து விசாரணை அமைப்புகளும் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த அமித்ஷா, உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
