Monday, July 28, 2025

100 ரூபாய் முதலீடு செய்தால் 35 லட்சம் ரூபாய் வரை Easy-ஆ கிடைக்கும்

நீங்க சந்தை அபாயமில்லாம, மாதம்தோறும் ஒரு சின்ன தொகையை சேமிச்சு, நல்ல வருமானம் எதிர்பாக்கிறீங்கனா… அஞ்சல் அலுவலகத்தின் தொடர் வைப்பு திட்டம் –அதாவது RD – உங்கக்காகத்தான்.

இந்த திட்டம் இந்திய அரசே உத்தரவாதம் தரும் ஒரு பாதுகாப்பான சேமிப்பு வாய்ப்பு.
மாதம் ரூ.100 மட்டுமே முதல் முதலீடு செய்யலாம். அதுக்கு மேல உங்களுக்கு சாத்யமிருந்த அளவுக்கு, எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

மாதம் ரூ.1,500 சேமிச்சீங்கனா, 5 வருடம் கழிச்சு ₹1.07 லட்சம் வரைக்கும் கிடைக்கும். மாதம் ரூ.10,000 சேமிச்சா, ₹7.13 லட்சம் வரைக்கும் கிடைக்கும். அது மட்டும் இல்ல, மாதம் ரூ.50,000 சேமிச்சீங்கனா, 5 வருடத்தில் ₹35.68 லட்சம் வரை கிடைக்கும்.

2025 ஜூலை-செப்டம்பர் காலத்துக்கான வட்டி 6.7%- ஆக நிர்ணயம் செய்திருக்காங்க. அதுவும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படும். இதனால், வட்டிக்கு மேல வட்டி குடுத்து உங்கள் சேமிப்பு வேகமா வளரும்.

12 மாதத்துக்கு பிறகு, உங்கள் சேமிப்பில் 50% வரை கடனாகவும் எடுக்கலாம். அதுவும் மிகக் குறைந்த வட்டியில். முன்கூட்டியே பணம் எடுத்துக்க வேண்டுமானாலும், 3 வருடம் கழிச்சு சில நிபந்தனைகளுடன் அதை செய்யலாம்.

வருமான வரி சட்டம் 80C கீழ், வரி சலுகையும் உண்டு. 10 வயதுக்கு மேலே யார் வேண்டுமானாலும் இந்த கணக்கைத் தொடங்கலாம். தம்பதிகள், குடும்பத்தோட கூட்டுக் கணக்காகவும் வைத்துக்கலாம்.

நம்பிக்கையோட, நிதியாக ஒரு நல்ல எதிர்காலத்தை கட்டிட விரும்புற எல்லாருக்குமே, இது ஒரு நிச்சயமான வழி. சந்தை உயர்ச்சி,வீழ்ச்சியோட வாட வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பும், வருமானமுமே இந்த திட்டத்துக்கு அடிப்படை.

இந்த திட்டத்துல சேர ,உங்க அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு போங்க… இப்போதே உங்கள் சேமிப்பை தொடங்குங்க…நாளைய நம்பிக்கைக்கு இன்று ஒரு சிறு படி போடுங்க.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News