உலகம் முழுவதும் இன்று மே 15-ஆம் தேதி உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. “குடும்பம் என்பது மனித வாழ்வின் அடிப்படை களம்” என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த நாளில், ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறவுகளைப் பற்றிக் கருத்து கொள்வது அவசியமாகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1994-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே 15-ஆம் தேதி உலக குடும்ப தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், குடும்பத்தின் முக்கியத்துவத்தை உலகளவில் நினைவுபடுத்துவது மட்டுமல்ல, குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிந்திக்க வைக்கும் நாளாகவும் இது அமைந்துள்ளது. இன்று, தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைப்பளு, நகர வாழ்க்கை போன்று பல காரணங்களால் குடும்ப உறவுகளில் தூரம் ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் குடும்பம்தான் என்பதனை மறக்கக் கூடாது.
ஒரு குழந்தையின் மனநல வளர்ச்சிக்கு, பெரியவர்களின் மனஅமைதி, முதியவர்களின் பாதுகாப்பு, இவை அனைத்துக்கும் உறுதியான அடித்தளமாக குடும்பம் செயல்படுகிறது. குடும்ப உறவுகளில் பாராட்டும் வார்த்தைகள், சிறு உதவிகள், அன்பும் கவனமும் கொண்ட செயல்கள் கூட வாழ்க்கையின் அழகை அதிகரிக்கிறது. இன்று நமக்கு அருகிலிருக்கும் பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள், உறவினர்கள் – யாராக இருந்தாலும், அவர்களோடு ஒரு சிறிய நேரம் செலவிடுவது கூட இந்த உலக குடும்ப தினத்தை சிறப்பாக மாற்றும்.
இந்த உலக குடும்ப தினத்தைக் கொண்டு நாம் எல்லோரும் உணர வேண்டியது என்னவென்றால், எத்தனை வேலையாக இருந்தாலும், வாழ்க்கையின் இறுதியில் நம்மை உண்மையாக அன்புடன் நினைப்பது – குடும்பமே. இன்று ஒருமுறை பார்த்து பேசுங்கள், ஒரு அழைப்பு செய்யுங்கள், ஒரு அரவணைப்பை வழங்குங்கள் – ஏனென்றால் குடும்பம் என்ற உறவு நம்மை உயிரோடு வைத்திருக்கும் வேர்கள்தான்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் இழப்பது – வேலை இல்லை, பணம் இல்லை, வாய்ப்பு இல்லை…அப்படின்னு நம்ம நினைக்கிறோம். ஆனா உண்மையில் நாம் இழப்பது என்ன தெரியுமா? ஒரு warm hug, ஒரு குட்டி சிரிப்பு, ஒரு Sunday lunch…அதெல்லாம் குடும்பத்தால் மட்டும் தான் கொடுக்க முடியும்!