Friday, December 27, 2024

டைம் ட்ராவல் செய்து 2023இல் இருந்து 2022க்கு சென்ற மக்கள்! எப்புட்றா?

பழைய வருடம் கழிந்து புத்தாண்டு பிறந்த மகிழ்ச்சியை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் அங்குள்ள கலாச்சார முறைகளின் படி கொண்டாடுவது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிற்கும் புத்தாண்டு பிறக்கும் நேரமும் கூட வித்தியாசப்படுகிறது.

அதன்படி, 2023ஆம் ஆண்டு முதலில் பசிபிக் தீவு நாடுகளான கிரிபாட்டி, டோங்கா மற்றும் சாமுவா நாடுகளிலும், கடைசியாக அமெரிக்காவுக்கு அருகில் உள்ள Baker Island மற்றும் ஹௌலாண்ட் பகுதிகளில் பிறந்தது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து நள்ளிரவு 12.29 மணிக்கு புறப்பட்ட விமானம் அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்க்கோவிற்கு 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி  மாலை 5 மணியளவில் சென்றடைந்துள்ளது.

பசிபிக் பெருங்கடலை மையமாக வைத்தே சர்வதேச நேரம் கணக்கிடப்படுகிறது. இதனால், ஆசியாவை விட 23 மணிநேரம் தாமதமான நேரத்தை அமெரிக்கா கொண்டிருப்பதால், சுவாரஸ்யமான இந்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

Latest news