உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் வணிகத்தில் 10 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இன்டெல் நிறுவனம் மற்றும் டிரம்ப் நிர்வாகம் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு, ஜோ பைடன் அதிபராக இருந்த காலத்தில் இன்டெல் நிறுவனத்திற்கு பெரிய அளவிலான மானியங்கள் வழங்கப்பட்டிருந்தன. டிரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கையை தொடர்ந்து, இன்டெல் நிறுவனத்தில் இருந்து பங்குகள் அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட உள்ளது. இது இன்டெல் நிறுவன மொத்த பங்குகளில் 9.9 சதவீதத்தை குறிக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க அரசு இன்டெலின் மிகப் பெரிய பங்குதாரராக மாறியது குறிப்பிடத்தக்கது. இதன் விரிவான விவரங்கள் இன்டெல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவாக இடம்பெற்றுள்ளன.