Sunday, January 25, 2026

வாய்வு பிரச்சனைதானே என சாதாரணமாக இருக்காதீங்க., இந்த விஷயத்தில் கவனமா இருங்க..!

தற்காலத்தில் நிறைய பேருக்கு வயது வித்தியாசமின்றி வாய்வு தொல்லை (Gas problem) பிரச்னை அதிகம் உள்ளது. சிலர் வாய்வு பிரச்னைதானே என சாதாரணமாக எண்ணி, சோடா குடித்து ஒரு ஏப்பம் விட்டால் சரியாகும் என்று நினைக்கிறார்கள். வாய்வு பிரச்னையை தொடர விட்டால் மூட்டு வலி, அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆகியவையும் ஏற்படும்.

வாய்வு பிரச்னை ஏற்பட முக்கியமான காரணம் செரிமானமின்மைதான். நாம் உண்ட உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் இந்த பிரச்னை தலைதூக்கும். வாய்வு பிரச்னை இருப்பவர்களுக்கு சோர்வு இருக்கும்.

பசி இருக்காது. அதிக காரமான உணவுகளை உண்பது, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது, புகை,மது அருந்துதல் ஆகியவையும் வாய்வு பிரச்னைக்கு முக்கியமான காரணங்கள்.

வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்

உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்புகள், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். ஆகவே, இந்தக் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

சீரகத் தண்ணீர்

சீரகத் தண்ணீர் வாயுத் தொல்லையைப் போக்க சிறந்த மருந்து. சீரகம் நமது உமிழ் நீரை அதிகமாக சுரக்கச் செய்து உணவை எளிதாக சீரணிக்க உதவுகிறது. இதனாலும் வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இஞ்சி

ஆயுர்வேத மருத்துவரான வசந்த் லாட் தினமும் சாப்பிட்ட பிறகு 1 டீ ஸ்பூன் இஞ்சி மற்றும் 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து பருகி வாருங்கள். இப்படி இஞ்சி டீ குடித்து வரும் போது வாயுத் தொல்லை நீங்கி விடும்.

Related News

Latest News