விஜய், கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சி வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
20 வயதாகும் வைஷ்ணவி, தவெகவின் இளம் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், தவெக சார்பாக கோவையில் பல்வேறு பொது சேவை பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு வைஷ்ணவி, தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என்று தனக்கு கண்டீஷன் போடப்பட்டதாக குறிப்பிட்ட வைஷ்ணவி, இன்னும் ஒரு சில காரணங்களை அடுக்கி தான் இக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக கட்சியில் சேர்ந்துள்ளார். இன்று முதல் என் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.