Tuesday, January 27, 2026

இணையத்தை கலங்கடிக்கும் கருப்பு நூடுல்ஸ்! எப்புட்றா?

வித விதமான உணவுகளை விநோதமான முறையில் தயார் செய்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது. அந்த வகையில் புதிதாக களத்தில் இறங்கியுள்ளது கருப்பு நூடுல்ஸ்.

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக கருப்பு நூடுல்ஸை எடுத்து, வழக்கம் போல சமைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘தேவையான colour போட்டா வரப் போது, இதென்ன பிரமாதம்’, ‘சாப்பிட ஆசையா இருக்கு’ ‘அருவருப்பா இருக்கு’ என நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கொரியாவில் செய்யப்படும் கருப்பு நூடுல்ஸ் உருளைக்கிழங்கு மற்றும் மாவு சேர்த்து செய்யப்படும் நிலையில், பிற நாடுகளில் கடம்பா மீனில் இருந்து எடுக்கப்படும் மை கொண்டு கருப்பு நூடுல்ஸ் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News