2025ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்களின் ஒட்டுமொத்த நன்கொடைகள் ரூ.10,380 கோடியை அடைந்துள்ளன. இந்த பட்டியலில் 191 தொழிலதிபர்கள் உள்ளனர். இதில் 12 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த நன்கொடையின் 85% அதிகரிப்பு காணப்படுகிறது.
எச்.எச்.எல். டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடையாளர்களில் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் ஆண்டிற்கு ரூ.2,708 கோடியை நன்கொடை வழங்குகின்றனர் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 முறை முதலிடத்தில் உள்ளனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.626 கோடியை தொண்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 54% அதிகம்.
பஜாஜ் குடும்பம் ரூ.446 கோடியை நன்கொடையாகவழங்கியுள்ளது. தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தார் ரூ.440 கோடியை சமுக மற்றும் சுகாதார பணிகளுக்கு வழங்கியுள்ளனர்.
இந்த பட்டியலில் 5-வது இடத்தில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.386 கோடியை வழங்கியுள்ளனர்.
மேலும் நந்தன் நளகேனி, ஹிந்துஜா குடும்பம், ரோகிணி நளகேனி, சுதிர் மற்றும் சமீர் மேத்தா, மற்றும் சைரஸ் மற்றும் ஆதார் பூனாவாளா ஆகியோர் நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த தொழிலதிபர்கள் வழங்கும் நன்கொடைகள் இந்தியாவின் சமூக சேவைகளுக்கும், கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்களிப்பாக உள்ளன.
