டிடிவி தினகரனுக்கும், திமுகவுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சத்தியம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “உத்தரப்பிரதேசத்தில் இருந்து 20 ரூபாய்க்கு உளுந்து வாங்கி வந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரிசன், முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சூழ்ச்சியே இந்த நிதிநிலை அறிக்கை” என்று கூறினார்.
15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பொதுமக்கள் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் அளவில் உள்ளது என்றும் பொன்னையன் குற்றம்சாட்டினார். மேலும், டிடிவி தினகரனுக்கும் , திமுகவுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது என்றும் பொன்னையன் தெரிவித்தார்.