விமான போக்குவரத்து இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம், இயல்புநிலை திரும்ப பாடுபடுவதாக தெரிவித்துள்ளது.
நிர்வாக காரணங்களை கூறி, இண்டிகோ நிறுவனம் நுாற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விமான போக்குவரத்து இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம், இயல்புநிலை திரும்ப பாடுபடுவதாக தெரிவித்துள்ளது.
இண்டிகோவின் நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பை கேட்டுகொள்கிறோம் எனவும் X தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. தாமதங்களை குறைத்து இயல்புநிலையை மீட்டெடுக்க இண்டிகோ விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளது.
