Monday, December 8, 2025

கடும் வீழ்ச்சியை சந்தித்த இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு

மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இண்டிகோ நிறுவனம் கடந்த 6 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சனிக்கிழமை வரை விமான ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.610 கோடி வரை திரும்ப கொடுத்து உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சம் கூறியுள்ளது.

இந்நிலையில் விமான சேவைகள் இன்னும் சீராகாததால் அதன் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது. பங்கு விலை ரூ.505 சரிந்து ரூ.4,865-க்கு விற்பனையாகிறது. இண்டிகோவின் சந்தை மூலதனம் ரூ.35,000 கோடி சரிந்துள்ளது.

Related News

Latest News