நாட்டின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, கடந்த சில நாள்களாக விமான சேவை ரத்து, விமான தாமதம் எனப் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்றும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
