Tuesday, April 29, 2025

பாகிஸ்தான் தலையில் இந்தியா இறக்கிய அடுத்த இடி! ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி அதிரடி! இது மட்டும் நடந்தால்…

தீவிரவாதமும் பயங்கரவாதமும் வன்முறையும் விதிமீறலும் எந்த உருவத்தில் வந்தாலும் எதிர்க்கப்படவேண்டும் என்பதும் அவை முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்பதும் மீண்டும் மீண்டுமாக உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. ரத்தம் சிந்த வைக்கும் தீமைகளும், உயிர்களை கொன்று குவிக்கும் சீரழிவும் மனித குலத்துக்கே மாபெரும் அச்சுறுத்தல் என்பதால் அவற்றுக்கு முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைக்க ஒட்டு மொத்த மனித இனமும் கரம் கோர்க்க வேண்டும் என்றே உலகமே விரும்புகிறது.

இந்நிலையில் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா தனது வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை விதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அப்படி இந்திய வான்வெளி பாகிஸ்தானுக்கு அடைக்கப்பட்டால் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் சீனா மற்றும் இலங்கை வழியாக சுற்றி செல்லும் நீண்ட நெடு பாதைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என தெரிகிறது. மேலும், பஹல்காம் தாக்குதலில் 26 பேர் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் விமான சேவைகளை இயக்க வான்வெளி பாதையை மூடுவது மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் கப்பல்களை இந்திய துறைமுகங்களில் தடை செய்யும் முடிவையும் பரிசீலித்து வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இதனால் பாகிஸ்தான் நாட்டின் கடல் வழி, வான் வழி போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி பாகிஸ்தானை கதிகலங்க செய்துள்ளது.

பஹல்காம் படுகொலை சம்பவத்துக்கு பின்னர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என்று கலக்கத்தில் உள்ள பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய வான்வெளியை தவிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்திய வான்வெளி அடைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு அது பெருமளவு நிதி சுமையை கூட்டிவிடும் என்பது கவனிக்கப்படத்தக்கது.

Latest news