இந்திய விமான தொழில்நுட்பத்தில் முக்கியமான திருப்பு முனையாக இருக்கும் Advanced Medium Combat Aircraft திட்டம் தொடர்பாக முக்கிய தகவலை விளக்குகிறது இந்த பதிவு.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் Rajnath Singh, AMCA-வின் execution model கோரிக்கையை அண்மையில் அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியா “ஐந்தாம் தலைமுறை” ரகசியத்திறனைக் கொண்ட விமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. AMCA விமானம் நுட்பமான விமானமாக வடிவமைக்கப்பட்டு, இரு இயந்திரங்களுடன், ரேடாரில் கண்டுபிடிக்க கடினமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் stealth தொழில்நுட்பத்தினையும் உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aeronautical Development Agency என்று சொல்லப்படும் ADA நிறுவனம் இதை வடிவமைக்கும் பணியில் உள்ளது. இந்த திட்டம் இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வெவ்வேறு வடிவங்களுக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடக்க செலவு ரூபாய் 15,000 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, AMCA-வின் முதற்கட்ட தயாரிப்பு 2035 ஆண்டுக்கு முன்பாக தொடங்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய விமானம் இந்தியாவின் விமான சக்தியை உலகளாவிய ரீதியில் முன்னிலைப்படுத்தும் வகையில் மாற்றக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
