இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் கடந்த வாரம் Drone-களின் இரைச்சலும் வெடிகுண்டுகளின் சத்தமும் அவ்வப்போது தொடர்ந்து கேட்டபடியே இருந்தன. அந்த தாக்குதலில் இந்தியா பாகிஸ்தானின் air base-களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொறிகலங்கிப்போன பாகிஸ்தான் இந்த மரண அடிக்கு பிறகே மோதலை முடிவுக்குக் கொண்டு வர தூதுவிட்டது. இதற்கிடையே இந்த மோதல் முடிவுக்கு வந்து சுமார் 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் தரப்பு இப்போது ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
பாகிஸ்தானின் ராணுவ தலைமையிடத்தில் நடந்த தாக்குதலைக் கூட அந்நாட்டால் முறியடிக்க முடியவில்லை என்பது ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றி பாகிஸ்தானை ரத்தக் கண்ணீர் விடவைத்துவிட்டது. பாகிஸ்தானின் பல்வேறு விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தாலும் அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராவல்பிண்டி ராணுவ தலைமையிடத்தில் உள்ள ஏர் பேஸில் கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பிறகு நிலைமை கைமீறி போனதை உணர்ந்தே மோதலே முடிவுக்குக் கொண்டு வர வெள்ளை கொடி காண்பித்தது.
இதற்கிடையே இந்தியாவின் தாக்குதலில் எத்தனை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த விவரங்களைப் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும் 78 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் ராணுவ வீரர்கள், மீதமுள்ள 5 பேர் விமானப்படை வீரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.