உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகிலுள்ள கங்கா நதியில் அமைந்துள்ள பசு லோக் பகுதியில், டி ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 ட்வின் ஓட்டர் வகையைச் சேர்ந்த நீர் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் ஒரு டர்போபிராப் விமானத்தை மிதவிகள் பொருத்தி, நீரிலும் இயக்கக்கூடிய விமானமாக மாற்றி சோதனை செய்தது இதுவே முதல் முறையாகும்.
9 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் நிலத்திலும், நீரிலும் புறப்படும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டதாகும். இந்த வெற்றிகரமான சோதனை மூலம், இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் அந்தமான், லட்சத்தீவு, தேரி ஏரி போன்ற தொலைதூர பகுதிகளுக்கு எளிதான விமான சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நீர் விமான சேவைகளை வணிக ரீதியாக தொடங்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
