இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் அசுர வளர்ச்சியடைந்து வருவதாக, மொபைல் தகவல்தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த விழாவில் பேசிய அந்த அமைப்பின் ஆசிய பசிபிக் தலைவர் ஜூலியன் கார்மன், இந்தியாவின் டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தை கணிசமாக விரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டார். நாட்டை மொத்த பொருளாதாரத்தில் சுமார் 20 சதவிகித பங்களிப்பை டிஜிட்டல் பொருளாதாரம் வழங்குகிறது என்றும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 4 மடங்கு வேகமாக வளர்ந்து, டிஜிட்டல் நாடுகளின் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது என கூறினார்.