உலகில் இருக்கும் பல பாரம்பரியங்கள் நம்பை வியப்பில் ஆழ்த்தும் விதம் இருக்கும்.இங்கும் அப்படி தான் ஒரு வினோத பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.திருமணத்தன்று மணமகனின் சகோதரி தான் மணமகளை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
குஜராத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியினர் இந்த தனித்துவமான பாரம்பரியத்தை இன்றும் பின் பற்றி வருகின்றனர். மணமகனின் சகோதரி திருமணம் செய்து மணமகளை வீட்டிற்கு அழைத்து வருகிறார். மணமகன் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. மணமகன் தனது திருமண நாளில் அவரது வீட்டில் தங்குவதும், மணமகனின் சகோதரி ஊர்வலமாகச் சென்று மணமகளை திருமணம் செய்து அணைத்து சடங்குகளை செய்து முடித்தபின் வீட்டிற்கு வரவேண்டும்.
மணமகனுக்கு சகோதரி இல்லையென்றால், குடும்பத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் இந்த சடங்கை செய்கின்றனர். திருமணத்தின் போது இதுபோன்ற சடங்குகள் செய்யப்படவில்லை என்றால், நிச்சயமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என நம்புகின்றனர் இந்த மக்கள்.