பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது என கூறி, பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வருத்தமளிக்கிறது எனவும், அதே சமயம் தாங்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் எனவும் சீனா கூறியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தகர்க்கப்பட்டது என்பதும், பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ மக்கள் மீதோ துளி அளவு கூட தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதும் குறப்பிடத்தக்கது.