Saturday, February 14, 2026

உயிரிழந்த மாணவிக்கு ரூ.262 கோடி இழப்பீடு! காசை வாங்க வேண்டிய தந்தைக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவி ஜானவி கந்துலா குடும்பத்திற்கு 29 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 262 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஜானவி கந்துலா, அமெரிக்காவின் Seattle நகரில் உள்ள Northeastern Universityயின் கிளையில் முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்பு பயின்று வந்தார். 2023ஆம் ஆண்டு, சியாட்டில் நகரில் சாலை கடந்து சென்றபோது, சைரன் ஒலி மற்றும் அவசர விளக்குகளுடன் சென்ற போலீஸ் வாகனம் அவரை மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜானவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கிங் கவுண்டி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் வாகனம் அவசர பணிக்காக சைரன் மற்றும் விளக்குகளுடன் சென்றதாக அரசுத் தரப்பு தெரிவித்தது. எனினும், வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதாகக் கூறப்பட்ட போலீஸ் அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர்மீது தனியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

நீதிமன்றம், ஜானவியின் குடும்பத்திற்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இது இந்திய ரூபாயில் சுமார் 262 கோடியாகும்.

இந்நிலையில், மகளின் உயிரிழப்பால் கடும் மனஉளைச்சலில் இருந்த அவரது தந்தை, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் Vijayawada நகரில் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். மகளின் மரணத்திற்குப் பிறகு நீண்ட காலம் விடுப்பில் இருந்த அவர், சமீபத்தில் Guntakal பகுதியில் தலைமை கான்ஸ்டபிளாக பணியில் சேரவிருந்தார்.

ஆனால், குண்டக்கல் ரயில் நிலையத்தில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அங்கேயே அவர் உயிரிழந்தார். தனது மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு தீர்ப்பை அறியும் முன்பே அவர் மரணமடைந்தது பலரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News