உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்தியா மட்டுமின்றி பல நாடுகளின் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,074.41 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.46 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 302.59 புள்ளிகள் குறைந்து 80,882.99 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 107.55 புள்ளிகள் குறைந்து 24,660.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், ட்ரெண்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, கோட்டக் மஹிந்திரா ஆகியவை அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன.
சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ்ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளன.