பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு முக்கிய மாற்றங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் பெற்றோர் பெயர் அச்சிடப்பட்டு வருகிறது. இனி பெற்றோர் பெயர் அச்சிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாஸ்போர்ட்களில் முகவரி கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்தது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முறை தற்போது கைவிடப்படுகிறது.
தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்தில் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் 422 இடங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவற்றை படிப்படியாக உயர்த்தி 600 இடங்களாக மாற்றப்பட உள்ளன.