அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரண்டும் பிரதான அரசியல் கட்சிகளாக உள்ளன.
2020ஆம் ஆண்டு ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானார்.
அடுத்த அதிபர் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளதால் இரு கட்சிகளின் வேட்பாளர்கள் யாராக இருக்க கூடும் என அரசியல் வட்டாரங்களில் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி, குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். குடியரசுக் கட்சியில் டொனால்ட் டிரம்ப், ரான் டி சான்டிஸ் (Ron De Santis) ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிக்கி ஹேலியின் அறிவிப்பு அமெரிக்க அரசியலில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.