Thursday, February 5, 2026

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்திருந்ததாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான மிக ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்கள் அடங்கிய தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக வீட்டில் வைத்திருந்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், மும்பையில் பிறந்தவர். இவர் 2001 முதல் அமெரிக்க அரசில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News