Thursday, February 5, 2026

கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  “கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கத்தார் அதிகாரிகளிடமிருந்து வரும் உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்,”என்று தெரிவித்துள்ளது.

Related News

Latest News