Sunday, December 28, 2025

காவல் துணை ஆணையராக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனை

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் இடம் பிடித்திருந்தார்.

இதனால் மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு 34 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும் காவல்துறையில் டி.எஸ்.பி. பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியின் காவல் துணை ஆணையராக ரிச்சா கோஷ் இன்று பொறுப்பேற்றார்.

Related News

Latest News