Monday, June 23, 2025

இந்திய விமானப்படை வாங்கும் F-21! இனி யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!

அமெரிக்காவை சேர்ந்த F ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் Lockheed Martin, இந்தியாவுக்கு F-21 போர் விமானத்தை விற்பனை செய்ய முன்வந்திருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த விமானங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உலகமே 5ம் தலைமுறை விமானங்கள், 6ம் தலைமுறை விமானங்கள் என நவீனமயமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கும் மேம்படுத்தப்பட்ட விமானங்கள் தேவை. ஆனால் இப்போது அமெரிக்க நிறுவனம் விற்பனை செய்ய முன்வந்துள்ள F-21 போர் விமானம் 4.5ம் தலைமுறையை சேர்ந்தது.

இருப்பினும் போரில் நவீனமயமான விமானங்களை விட, கைவசமுள்ள மொத்த விமானங்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தான் முக்கியம். எனவே 5ம் தலைமுறை விமானங்களை வாங்குவதை விட, 4.5ம் தலைமுறை விமானமான F-21ஐ அதிகமாக வாங்குவதே புத்திசாலித்தனம்.

விலையும் இதற்கு மற்றொரு முக்கிய காரணம். F-21ஐ தயாரிக்கும் Lockheed Martin நிறுவனத்தால் தான் F-35 எனும் 5ம் தலைமுறை விமானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை 150 மில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் F-21ன் Upgrade செய்யப்பட்ட ரகத்தின் விலை 100 மில்லியன் மட்டுமே.

இந்நிலையில் “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்கின்ற கதையாக போர் விமானங்களை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளும் இந்தியாவிடம் பெருமளவு உள்ளது. ஒருவேளை வரும் நாட்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் வெடித்தால் பாகிஸ்தான் 5ம் தலைமுறை விமானங்களை பயன்படுத்தும். ஆனால் அதை தகர்த்து அழிக்கும் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கின்றன. பிறகு என்ன… பாகிஸ்தானின் நிலைமை பரிதாபம் தான்.

ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் செலவு குறைவு என்பதால் நம்மிடம் அதிகளவிலான ஏவுகணைகள் இருக்கும். இதிலிருந்து சீன போர் விமானங்கள் கூட தப்ப முடியாது. எனவே 5ம் தலைமுறை விமானங்களுக்கு பின்னால் போகாமல் சாதுர்யமான முடிவை எடுக்க முற்படுகிறது இந்தியா.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news