உலகம் முழுவதும் 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் இதய நோய், நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியாவில் 2050 ஆம் ஆண்டுக்குள் 44 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனா.அமெரிக்கா நாடுகளும் இந்த பிரச்சனையை சந்திக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.