இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல் உச்சமடைந்து இருநாடுகள் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் தான் இரு நாட்டுக்கும் நடுவே பேச்சுவார்த்தைக்கு சமரசம் செய்ய தயார் எனும் வகையில் பேசியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலையீட்டை இந்தியா மறுத்துள்ளது. அதே வேளையில் அமெரிக்கா முதலில் இதை செய்ய வேண்டும் என்று முக்கிய வலியுறுத்தலை வைத்துள்ள அதிரடி தகவல் தபோது வெளியாகியிருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து டொனால்டு டிரம்ப் இது மிகவும் மோசமானது என்றும் அவர் இருநாடுகளுடன் பழகி வருவதாகவும் தனக்கு இரண்டு நாடுகளும் நன்றாக தெரியும் என்றும் இந்த பிரச்சனையை அவர்களே சரிசெய்ய முடியும் என்று நம்புவதாகவும் தாக்குதல்களை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் இந்தியா பழிக்கு பழியாக பதிலடி கொடுத்துள்ளனர் என்றும் இரு நாட்டுடனும் தங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஏதாவது உதவி செய்ய முடிந்தால் அவர் கட்டாயமாக செய்வதாகவும் கூறியிருந்தார்.
இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் சமரசம் செய்ய தயார் என்று மறைமுகமாக விடுத்த சலுகையை இந்தியா அடியோடு மறுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா கூறும்போது, ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு உண்மையில் நாங்கள் நன்றி தெரிவித்துகொள்ளும் அதேநேரத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பாகிஸ்தானிடம் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய வர வேண்டாம் என்றும் அதற்குபதிலாக பயங்கரவாதிகளை ஆதரிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
நம் நாட்டின் பிரச்சனை தொடர்பாக டொனால்ட் டிரம்பின் சமரச Offer-ஐ இந்தியா புறம்தள்ளுவது இது முதல் முறையல்ல என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.