Thursday, May 15, 2025

இந்தியா ஏவி விட்ட ‘ராட்சசன்’ ! அடித்துக் கொள்ளும் உலக நாடுகள்!

இப்போது உலக ராணுவக் கண்கள் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணையை நோக்கி திரும்பியுள்ளன. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது இந்த ஏவுகணை காட்டிய செயல்திறன் உலக நாடுகளை அதிர வைக்கச் செய்துள்ளது. அதன் பிறகு, பிரம்மோஸ் வாங்க விரும்பும் நாடுகளின் வரிசை நீண்டு கொண்டே வருகிறது…

இந்த ஏவுகணையின் பெயர் கூட, இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதிகளை அடிப்படையாகக் கொண்டது. அது போலவே இரு நாடுகளின் தொழில்நுட்ப இணைப்பு – இந்த ஏவுகணையின் சக்தியை வெளிக்கொணருகிறது.

பிரம்மோஸ் ஏவுகணையின் சிறப்பு என்னவென்றால் அதன் அதிவேகம் தான். இது Mach 3 – அதாவது ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகம். இந்த வேகத்தில் எதிரி ரேடாரை கண்டுபிடிக்கும்போது, அது ஏற்கனவே இலக்கைத் தாக்கி முடித்துவிடும். மேலும், அது தரைக்கு மிக அருகில் பறந்து, ரேடார் கண்களுக்கு புலப்படாமல் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

முதல் கட்டத்தில் இது 290 கி.மீ.தூரம் பயணித்தது. இப்போது, மேம்படுத்தப்பட்ட மாடல்கள் 500 கி.மீ. தாண்டி செல்லும் திறன் பெற்றுள்ளன. நிலம், கடல், ஆகாயம் – எங்கிருந்தும் ஏவ முடியும் என்பதால், எதிரியின் கணிப்புகளை முற்றிலும் குழப்பிவிடுகிறது.

இந்த ஏவுகணையின் தாக்கம் சில்லறை அல்ல. இது 200 முதல் 300 கிலோ வரை ஹெவி போர்ஹெட்களை சுமந்து செல்லும். ஒரு தாக்குதலில் ஒரு போர்க்கப்பலையே முழுமையாக அழிக்க முடியும். இந்தியா இவற்றை பயன்படுத்தத் தீர்மானித்தால், பாகிஸ்தான் தடுக்கும் வாய்ப்பே இல்லை. காரணம், பாகிஸ்தானின் தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் இந்த வேகம், இந்த நவீன தொழில்நுட்பத்துக்கு மேலாக இல்லை.

பிலிப்பைன்ஸ் \$375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஏற்கனவே பிரம்மோஸை வாங்கி, முதல் தொகுப்பை பெற்றுள்ளது. இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா, பிரேசில், எகிப்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், கத்தார்… இப்படி 17 நாடுகள் இந்த ஏவுகணையை வாங்கும் ஆர்வத்தில் காத்திருக்கின்றன.

Latest news