Wednesday, May 7, 2025

பாகிஸ்தானுக்கு தேதி குறித்த இந்தியா ! ஒலிக்க போகிறது அபாய சங்கு!

இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில், ஒரு மிக முக்கியமான போர் ஒத்திகை நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி, இது அவசர நடவடிக்கையென அறிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே அடுத்த கட்டத்தில் போர் வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
அப்படியான நேரத்தில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையை தாண்டி வரலாம். ஒருவேளை ரேடாரை கடந்து வந்துவிட்டால், மக்களுக்கு அதனை உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் உருவாகும். அதற்காகத்தான் இப்போது எச்சரிக்கை சத்தங்கள், ஹாட்லைன், ரேடியோ சிக்னல்கள், ராணுவ கட்டுப்பாட்டு அறைகள் எல்லாம் ஒருங்கிணைத்து சோதிக்கப்படுகின்றன.

விமானத் தாக்குதல் நடந்தால், மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை – யாரும் விலக முடியாது.
எங்கே ஒளிய வேண்டும், எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை நேரில் காண்பித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதே சமயம், அவசர சேவைகள் – தீயணைப்பு, மருத்துவம், மீட்பு, அனைத்தும் வேகமாக செயல்படுகிறதா என்பதையும் சோதிக்கிறார்கள். உதாரணமாக, முக்கியமான தொழிற்சாலைகள், பாதுகாப்பு அமைப்புகள் – இவற்றை முன்கூட்டியே மறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஒத்திகையின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட திட்டம் இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தானின் மீது ஒரு துல்லிய தாக்குதலை – அதாவது Precision Strike – என்னும் போர் முறையை நடத்த தயாராக உள்ளது.

முதலில் தீவிரவாத முகாம்கள், ராணுவ மையங்கள் போன்ற தாக்க வேண்டிய இடங்கள் குறிக்கப்படும் – .
பின்னர், டிரோன்களால் கண்காணிக்கப்படும். பிறகு அந்த இடங்கள் சரியானதா என்பது உறுதி செய்யப்படும்.

இப்படியான சூழ்நிலையில், உளவுத் தகவல்களை அடிப்படையாக வைத்து தாக்குதல் எப்படி நடத்த வேண்டும், எந்த வழியாக சென்று, எந்த வழியாக திரும்ப வேண்டும் என்பதை திட்டமிடுவார்கள்.
இத்திட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். கடைசியாக, பிரதமரின் ஒப்புதல் கிடைத்தபின் தான் தாக்குதல் நடை பெறும்.

முக்கியமாக, இத்தகைய தாக்குதல், நடைபெறும் நாளின் மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன்னால்தான் வீரர்களுக்கே தெரிவிக்கப்படும். ஏனென்றால் தகவல் கசியக்கூடாது.

இப்படி, மே 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒத்திகை, உண்மையான ஒரு போர் சூழ்நிலையை முறைப்படி எதிர்கொள்ள நாம் எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதை அளவிடும் சோதனை.

Latest news