Wednesday, January 7, 2026

அதிகம் வரி வசூல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று : அதிபர் டிரம்ப்

எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய 21 மில்லியன் டாலர் நிதியை ரத்து செய்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது : “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related News

Latest News