Wednesday, September 3, 2025

அதிக வரியை இந்தியா எங்களிடம் வசூலிக்கிறது : அதிபர் டிரம்ப் பேச்சு

இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.

இந்தியா எங்களிடம் மிகப்பெரியளவில் வரி வசூலிக்கிறது. இந்தியா தான் எங்களுடன் வியாபாரம் செய்கிறது. நாங்கள் அவர்களுடன் வியாபாரம் செய்யவில்லை. அவர்கள் தயாரித்த பொருட்களை இங்கே அனுப்பி 100% வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களின் பொருட்களுக்கு முட்டாள்தனமாக வரி விதிக்கவில்லை. இது தொடர்ந்தால், நாங்கள் எந்தப் பொருளையும் அங்கே அனுப்ப மாட்டோம். வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக வரியை இந்தியா எங்களிடம் வசூலிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக நாங்கள் இருக்கிறோம். ஆனால் அங்கு நாங்கள் மிகக் குறைந்த அளவில் பொருட்களை வியாபாரம் செய்கிறோம். இது முழுக்க முழுக்க ஒருதலைபட்சமானது என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News