Monday, May 12, 2025

வாலை ஒட்ட நறுக்கிய இந்தியா! இப்படித்தான் பாகிஸ்தானின் கதை முடிந்தது! LOC பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதி!

இந்தியாவின் எல்லையோர பகுதிகளான அமிர்தசரஸ், பதான்கோட் மற்றும் பெரோஸ்பூர் போன்ற எல்லை கட்டுப்பாட்டுக்குள்ளான இடங்களில் வாழும் பொதுமக்களை குறிவைத்து கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததை தொடர்ந்து எல்லையோரத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து பறக்கவிடப்பட்ட Drone-களை இந்திய ராணுவம் இடைமறித்து முறியடித்தது. கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் 35 முதல் 40 வீரர்களை இழந்துஇருப்பதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதலில் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்ததோடு கடற்படை சக்திவாய்ந்த வெடி பொருட்களை வழங்கியது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்தது சனிக்கிழமை மாலை இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புதல் ஏற்பட்டது.  ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை துளியும் மதிக்காமல் மீண்டும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. 8, 9 மற்றும் 10ம் தேதிகளில் பாகிஸ்தானின் ராணுவ டிரோன்கள், போர் விமானங்கள் நம் எல்லைக்குள் ஊடுருவினாலும் பாகிஸ்தானால் இந்திய கட்டமைப்புகளை தொடக்கூட முடியவில்லை. குறிப்பாக 9ம் தேதி இரவு நமது எல்லைக்குள் அலை அலையாய் வந்த பாகிஸ்தானின் டிரோன்கள் நமது வான் பாதுகாப்பு கட்டமைப்பால் சிதறவிடப்பட்டன. ஜம்மு, உதம்பூர், பதான்கோட், அமிர்தசரஸ், ஜெய்சல்மார், டல்ஹசி ஆகிய நகரங்களில் பறந்த Droneகள் மொத்தமாக சுட்டு வீழ்த்தப்பட்டன.

Latest news