அடிக்கடி கடன் வாங்கும் பழக்கம் பாகிஸ்தானை சரிவுக்கு இட்டுக் கொண்டு போகிறது!
சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ₹8,500 கோடி கடன் பெற்ற பாகிஸ்தான், இப்போது அடுத்த கட்ட கடனுக்காக உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது!
தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க இது அவசியம் என்பதாக பாகிஸ்தான் வாதாடுகிறது. ஆனால், அந்நாட்டு தாக்குதல்கள் மற்றும் உள்ளக நெருக்கடிகள் காரணமாக, இந்த முறையும் பாகிஸ்தான் கடனை இழக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் IMF-இல் இருந்து கடன் பெற்றது. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தாலும், அமெரிக்க ஆதரவு காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் ஒதுக்கப்பட்டது. இதில் இந்தியாவின் ₹500 கோடியும் அடங்குகிறது என்பது ஒரு வேதனை!
தற்போதைய நிலைமை என்னவென்றால், 2024-25 நிதியாண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் வெறும் 2.68%மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. இலக்காக வைத்திருந்த 3.6% வளர்ச்சி தொலைந்துவிட்டது.
நாட்டின் மொத்த உற்பத்தி $411 பில்லியன் ஆக இருந்தாலும், தனிநபர் வருமானம் $1,824 ஆக உயர்ந்தாலும் – இவை எல்லாம் திட்ட இலக்குகளை எட்டவில்லை.
விவசாயம் 1.8% வளர்ச்சி, தொழில்துறை 1.14% சரிவு – இந்த தரவுகள் எல்லாம் நாட்டின் நிதி மோசமான நிலையில் இருப்பதை நிரூபிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான், அடுத்த நிதியாண்டுக்காக, வெளிநாடுகளிடம் இருந்து $4.9 பில்லியன் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில், வணிக வங்கிகளிடம் இருந்து 7-8% வட்டியுடன் $2.64 பில்லியன் குறுகிய கால கடனாக பெற திட்டமிட்டுள்ளது.
மேலும், நீண்டகால கடனாக $2.27 பில்லியன் பெற, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு (Standard Chartered), துபாய் இஸ்லாமிய வங்கி, சீனாவின் ICBC போன்ற வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் ICBC வங்கியிடமிருந்து மட்டும் $1.1 பில்லியன் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது அனைத்தும் பாகிஸ்தானின் நிதித் திட்டத்தில் ஒரு அங்கமாகும்.
ஒரு பக்கம் நாட்டின் வளர்ச்சி குறைந்து வர, மறுபக்கம் கடன்களும் கூடியே வருகிறது.