Saturday, December 27, 2025

பீகாரில் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30,000 : இந்தியா கூட்டணி அதிரடி அறிவிப்பு

பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே கடைசி பிரம்மாஸ்திரமாகத் தேஜஸ்வி யாதவ் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை ஒரே தவணையாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஆளும் என்டிஏ கூட்டணி முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்குச் சொந்தத் தொழில் தொடங்க ரூ. 10,000 வழங்கப்படும். இதற்குப் போட்டியாகவே தேஜஸ்வி யாதவ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related News

Latest News