NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

937
Advertisement

சுதந்திர தின அமுதப்பெருவிழா உரை-ஸ்ரீஜித் திரவியம் IPS

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.
சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு கூறும் பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின அமுதப்பெருவிழா நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.
அதன்படி தேசிய புலனாய்வு முகமையின் தமிழக தலைமை அலுவலகத்தில் 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவையொட்டி தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஜித் திரவியம் IPS தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

ஸ்ரீஜித் திரவியம் IPS (NIA-SP)

அதன் பின்னர்,உள்துறை அமைச்சகம் சார்பில் காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன்னலமற்ற சேவை செய்து வரும் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு காவல் பிரிவில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி வருவோருக்கு உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் Ati Utkrisht Medal-ஐ ANS நாயுடுவுக்கு,15 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் Utkrisht Medal-ஐ செந்தில்குமாருக்கும் வழங்கி தேசிய புலனாய்வு முகமையின் SP
ஸ்ரீஜித் திரவியம் பாராட்டு தெரிவித்தார்.சிறப்பாக பணியாற்றி வரும் அருண் மகேஷ் என்ற அதிகாரிக்கும் விழாவில் பாராட்டும்-வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது

சுதந்திர தினவிழாவையொட்டி தேசியப்புலனாய்வு முகமை அலுவலகம் வண்ண பலூன்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் NIA-வின் தமிழக பிரிவு அதிகாரிகள்,அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்