தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகீர் உசேன் நிலத்தகராறு பிரச்சனையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னை அயனாவரம் திமுக தொழிற்சங்க நிர்வாகி கும்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். ஈரோட்டில் பட்டப்பகலில் சாலையில் வைத்து ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இப்படி நாளுக்கு நாள் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்கம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கொலை மிரட்டல் தொடர்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமறைவாக உள்ள ரவுடிகள் பட்டியலை தயார் செய்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.