அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்களுக்கு 10,000 ரூபாயும், ஆண்களுக்கு 6,000 ரூபாயும் திருமண முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி தங்கள் திருமணத்தின் போது முன்பணமாக ரூ.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம்.