கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மெட்ரோதிட்டங்களுக்கு அனுமதி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு இல்லை என்ற முதலமைச்சர் ஸ்டாலின் பதிவை சுட்டிக்காட்டி மத்திய வீட்டுவசதி நகர்ப்புற துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தமிழ்நாடு அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார். சென்னையை விட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அதிகம்பேர் பயன்படுத்துவார்கள்என தமிழக அரசின் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும், சென்னையை விட குறைந்த தொலைவில் மெட்ரோ அமைக்கப்படு நிலையில் எப்படி அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்றும் மனோகர் லால் கட்டார் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம், வேகம், கோவை மக்களை மெட்ரோ ரயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை மெட்ரோ 2ம் கட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடியில் ஒப்புதல் அளித்த பெருந்தன்மையை முதலமைச்சர் ஸ்டாலின் மறந்துவிட்டார் என்று குற்றம்சாட்டியுள்ள மனோகர் லால் கட்டார், பிரதமரின் மின் பேருந்து திட்டத்திலும் தமிழ்நாடு அரசு இணைய தமிழ்நாடு அரசு மறுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
